பாகிஸ்தானின் தீவிர வாத நடவடிக்கைகளுக்கு எதி ராக இந்திய அரசின் "ஆபரேஷன் சிந்தூர்' போர்த் தாக்குதல் சூழலில், ஒன்றிய அரசின் செயல் பாடுகளை ஆதாரங்களோடு வலுவாக விமர்சித்து எழுதி வரும் "தி வயர்' இணையப் பத்திரிகையின் இணைய தளத்தை ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச் சகம் முடக்கியிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி யுள்ளது.
தி வயர் இணையப் பத்திரிகை, பத்தாண்டுகளுக்கும் மேலாக, ஒன்றிய அரசின் அச் சுறுத்தல்களுக்கு அடிபணியா மல், அரசின் தவறுகளை ஆதா ரப்பூர்வமாக சுட்டிக்காட்டிவரு கிறது. இந்த இணையப் பத்திரி கையின் நம்பகத்தன்மை காரண மாக லட்சக்கணக்கானோர் இப்பத்திரிகையின் வாசகர்களாக இருக்கிறார்கள். இதன்மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுப்பதற்கான தருணத்தை எதிர் பார்த்துவந்த சூழலில், தற்போது நடைபெறும் ஆபரேஷன் சிந்தூர் போர் குறித்து அந்த இணையதளத்தில் வெளியிடப் படும் செய்திகள், தங்களுக்கு எதிராக இருப்ப தாகக் கருதிய ஒன் றிய அரசு, அதிரடியாக அந்த இணையதளத்தை முடக்கியிருப்பதாகத் தெரிகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wire_1.jpg)
இதுதொடர்பாக தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி யுள்ள பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக இந்திய அரசு, ற்ட்ங்ஜ்ண்ழ்ங்.ண்ய் வலைத்தளத்தை முடக்கியுள்ளது. ஐ.டி. சட்டம் 2000-ன் கீழ், மின் னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உத்தர வின்படி, 'தி வயர்' இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக இணைய சேவை வழங்குனர்கள் தெரிவித் துள்ளனர். இந்தியாவின் மிக முக்கியமான தருணத்தில் இப்படி யான தணிக்கை செய்யப்பட்ட தற்கு எதிராகப் போராடுவோம். இந்த நகர்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம். கடந்த பத்தாண்டு காலமாக எங்க ளுடைய பணிக்கு நீங்கள் ஆதரவு கொடுத்துவருகிறீர் கள். இந்த இக்கட்டான தருணத்தில் நாமனைவரும் இணைந்து நிற்போம் என்று நம்புகிறோம். ஆதாரப்பூர்வமான, துல்லியமான செய்திகளை எங்கள் வாசகர்களுக்கு வழங்குவதிலிருந்து பின் வாங்கவே மாட்டோம்! சத்யமேவ் ஜெயதே!' என்று குறிப்பிட்டுள்ளது.
"தி வயர்' பத்திரிகை இணையதளம் முடக்கப்பட்ட தற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்ட னத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து "ஊடகங்களை மௌனமாக்குவது ஜனநாயகத் தை பலவீனப்படுத்தும் செயல், பத்திரிகை சுதந்திரத்தின் குரல் வளை நெரிக்கப்படக்கூடாது' என்று கூறியிருக்கிறார்.
சென்னை பத்திரிகையா ளர்கள் மன்றமும் தனது கண்ட னத்தை தெரிவித்துள்ளது. காங் கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. கடும் எதிர்ப்புகளையடுத்து, "தி வயர்' இணைய பத்திரிகை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-05/wire-t.jpg)